2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

அதிரடி முடிவை எடுத்தார் மஹிந்த

Editorial   / 2024 ஜூன் 19 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  அரசியலுக்கு விடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, அவர் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருக்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  உடல்நிலை மற்றும் அரசியலில் ஈடுபடுவதற்காக நாடு முழுவதும் பயணம் செய்வதால் ஏற்படும் அசௌகரியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

எவ்வாறாயினும், எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காக அவர் தொடர்ந்து பாடுபடுவார் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .