2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

அதானி குழுமம் தெளிவுப்படுத்தல்

Editorial   / 2025 மார்ச் 20 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பரவும் வதந்திகளை அதானி கிரீன் எனர்ஜி SL Ltd. திட்டவட்டமாக மறுக்க விரும்புகிறது. ஒரு கிலோவாட்-மணித்தியாலத்திற்கு 7 சதம் ஆகவிலையை மாற்றியமைக்க நாங்கள் முன்வந்துள்ளதாக கூறும் கூற்றுக்கள் முற்றிலும் தவறானவை மற்றும் அடிப்படையற்றவை.

சம்பந்தப்பட்ட இலங்கை அதிகாரிகளுடன் நிறுவப்பட்ட ஒப்பந்தத்தின் ஆரம்ப விதிமுறைகளுக்கு நாங்கள் முழுமையாக உறுதிபூண்டுள்ளோம். அதானி கிரீன் எனர்ஜி SL Ltdஇன் முதலீட்டுத் திட்டங்களும் திட்ட அளவுருக்களும் மாறவில்லை.

முன்மொழியப்பட்ட காற்றாலை திட்டத்திலிருந்து அதானி குழுமம் சுயமாக மற்றும் மரியாதையுடன் விலகியிருந்தாலும், இலங்கை அரசாங்கம் ஏதாவது சந்தர்ப்பத்தில் நிறுவனத்தின் பங்களிப்பை கருதும் பட்சத்தில், எந்தவொரு மேம்பாட்டு வாய்ப்பையும் மேற்கொள்ள அதானி குழுமம் எப்போதும் தயாராக இருக்கும் என மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .