2025 ஜனவரி 15, புதன்கிழமை

அண்மைய தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி பின்னடைவு

Simrith   / 2025 ஜனவரி 14 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமீபத்தில் நடந்து முடிந்த கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தி பின்னடைவைச் சந்தித்துள்ளமை கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆதரவுடைய சபை களனி கூட்டுறவுச் சங்கத்தை நிர்வகிப்பதற்குத் தெரிவுசெய்யப்பட்டதுடன், அவர்களின் 99 உறுப்பினர்கள் முகாமைத்துவ சபைக்குத் தெரிவு செய்யப்பட்டனர், அதேவேளை ஆளும் NPP ஆதரவுடைய குழு 32 பேரையே பெற முடிந்தது.

அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள அங்குனகொலபெல்லெஸ்ஸ சபையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) முழுமையாக 9 ஆசனங்களைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றதுடன், NPP ஆதரவு குழு எந்த ஆசனத்தையும் பெறவில்லை.

எவ்வாறாயினும், மஹரவில் கூட்டுறவுச் சங்கத்தில் 100 உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் 89 ஆசனங்களைப் பெற்று NPP வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X