Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
R.Tharaniya / 2025 ஏப்ரல் 03 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு அஞ்சல் திணைக்கள சேவையாளர்களின் விடுமுறை எதிர்வரும் திங்கட்கிழமை 07 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 06 ஆம் திகதி வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா அதிபதி எஸ்.ஆர்.டபிள்யு. எம்.ஆர்.பி. சத்குமார அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை (02) வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அஞ்சல் திணைக்களத்துக்கு பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலை உரிய முறையில் சட்ட ரீதியாக நடாத்துவதற்காக அஞ்சல் திணைக்களம் பாரிய கடமையை மேற்கொள்ள வேண்டியுள்ளதெனவும், தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் அஞ்சலுக்கு இடப்படும் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஒப்படைத்தல், அஞ்சல் வாக்குச் சீட்டுக்கள் அடங்கிய பதிவு காப்புறுதி பைக்கட்டுக்கள் அஞ்சலுக்குக் கையளித்தல் மற்றும் வாக்குகளை எண்ணுதல் போன்ற நடவடிக்கைகளுக்காக சேவையாளர்களை நியமிக்கும் கடிதங்களை தாமதமின்றி ஒப்படைத்தல் மற்றும் வாக்காளர் அட்டைகளை வீடு வீடாகச் சென்று ஒப்படைத்தல் போன்ற சேவைகளை அஞ்சல் திணைக்களத்தால் தொடர்ச்சியாக மேற்கொள்ளவுள்ளதால் சகல ஊழியர்களின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
தேர்தல் கடமை நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்வதற்கு அவசியமென்பதால் அக் கடமைகளுக்காக சகல உத்தியோகத்தர்கள் மற்றும் சேவையாளர்கள் முன்னுரிமை வழங்க வேண்டுமென்பதுடன் அக் கடமைகளை பறக்கணித்தலை தவிர்த்துக் வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.எஸ்.எம்.ஹனீபா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
5 hours ago