2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை

அச்சுத்துறையில் ரஞ்சித் வேலை

Editorial   / 2025 ஏப்ரல் 06 , பி.ப. 02:16 - 0     - 111

வெலிக்கடை சிறையில் 16 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் கூடிய சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார் முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.. ரஞ்சித், அவர், சிறைச்சாலையின் அச்சுத் துறையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையருமான காமினி பி. திசாநாயக்க கூறினார்.

ரஞ்சித்தை சிறையில் அடைத்த அதே குற்றச்சாட்டிற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரது உறவினர் வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை அவர் எந்த வேலையிலும் ஈடுபடுத்தப்படவில்லை என்றும்  திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையின் அச்சுப் பிரிவில், சிறைத் தண்டனை அனுபவிக்கும் வெளிநாட்டு கைதிகள் அதிக அளவில் பணிபுரிவதாகவும், புத்தகப் பிணைப்பு, கோப்பு தயாரிப்பு போன்ற பல்வேறு பணிகளைச் செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அறியமுடிகின்றது.

மேல் நீதிமன்றத்தால் அவருக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்பட்ட அச்சுப் பிரிவின் கடமைகளில் இருந்து எம். திரு. ரஞ்சித் நீக்கப்பட உள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X