2025 ஜனவரி 03, வெள்ளிக்கிழமை

YouTube தவிர ஏனைய வலைத்தளங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தன

Freelancer   / 2024 டிசெம்பர் 31 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ Facebook, TikTok, Instagram, YouTube மற்றும் x கணக்குகள் நேற்று மாலை சைபர் தாக்குதலுக்கு உள்ளானது.

இதையடுத்து, உத்தியோகபூர்வ Facebook, TikTok, Instagram மற்றும் x கணக்குகள் தற்போது மீண்டும் இலங்கை பொலிஸின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

எனினும், பொலிஸ் யூடியூப் சேனல் இன்னும் இலங்கை பொலிஸின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சைபர் தாக்குதல் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X