2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

T56 துப்பாக்கியுடன் கடற்படை வீரர் கைது

Simrith   / 2025 பெப்ரவரி 16 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடற்படை மற்றும் குளியாப்பிட்டி பொலிஸார் இணைந்து இன்று (16) அதிகாலை இலுக்கேன பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, ​​T56 துப்பாக்கியுடன் கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இலுக்னெ கல்போலவில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையின் மூலம், சந்தேக நபர் பொறுப்பில் இருந்த, கொழும்பு துறைமுகத்தின் ரன்வல முகாமில் உள்ள ஆயுதக் கிடங்கில் இருந்து 2021 ஆம் ஆண்டு காணாமல் போன துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது .

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்காக சிப்பாய் வெலிசறை கடற்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மேலதிக விசாரணைக்காக குளியாப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .