Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Editorial / 2025 ஏப்ரல் 01 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPC) பணிப்பாளர் சபை உறுப்பினராக தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமன கடிதத்தை ஊடகத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த (26/03/2025) ஊடகத்துறை அமைச்சில் வைத்து வழங்கினார்.
1973 ஆம் ஆண்டின் இலங்கை பத்திரிகை சபையின் 5 ஆம் இலக்க சட்டத்தின் 3 (1) B மற்றும் 4(4) ஆகிய பிரிவுகளுக்கு அமைய ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது
திரு. செந்தில்வேலவர் கடந்த 33 வருடங்களாக லேக் ஹவுஸ் நிறுவனத்தில் தினகரன் ஆசிரியர் பீடத்தில் பணியாற்றி வருவதுடன் அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். அத்துடன் பல்வேறு அமைப்புகளின் உயர்பீட உறுப்பினராகவும் இவர் இருந்து வருகின்றார்.
இலங்கையில் அரசாங்கத்தினால் ஊடகத்துறை அமைச்சினால் உருவாக்கப்பட்டு பாராளுமன்றத்தில் அரசு அங்கீகாரம் பெறவுள்ள ஊடகவியளாளர்களுக்கான ஊடகக் கற்கைநெறி தொடர்பான 15 பேரடங்கிய செயற்குழுவில் அங்கம் வகிக்கும் ஒரே ஒரு தமிழ் ஊடக உறுப்பினராகவும் இவர் செயற்பட்டு வருகிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago