2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை

Online இல் வியாபாரம் செய்தவர் மரணம்

Editorial   / 2025 ஜனவரி 06 , மு.ப. 09:43 - 0     - 124

பாறுக் ஷிஹான்

அலைபேசி ஊடாக  online  வியாபார செயற்பாட்டில் ஈடுபட்டவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் சாய்ந்தமருது 11 உடையார் வீதியில் வசித்து வந்த முஹம்மட் நயீம் முஹம்மட் நப்லான் (வயது  20 ) என்ற  இளைஞனே  விரக்தி அடைந்த நிலையில் ஒரு வகையான மாத்திரைகள் உட்கொண்டு சிகிச்சை பலனளிக்காமையின் காரணமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (05) மாலை மரணமடைந்துள்ளார்.

குறித்த மரணமடைந்தவரின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சவளக்கடை   பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.மேலும் மரணம் அடைந்த இளைஞன் சவளக்கடை பொலிஸ் பிரிவில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.
 

 மரணமடைந்த இளைஞரின் தந்தை தனது மகன் வெளிநாட்டில் தொழில் புரிவதற்கான முன்னாயத்தங்கள் மேற்கொண்டதாகவும் அதற்காக அரிசி ஆலை ஒன்றில் கணக்காளராக சேர்த்ததாகவும் இதன்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான அலைபேசி   online ஊடாக  புதிய வகை வியாபார உத்திகள் உருவாக்கப்பட்டு   கொடுக்கல் வாங்கல்  இளைஞர் முதல் பல்வேறு தரப்பினரை இலக்கு வைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறித்த online  வியாபாரம் சட்டவிரோதமானது என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அதில் ஆர்வம் கொண்டு பல இளைஞர்கள் முதல் பலர்  பங்கேற்று வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X