Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Simrith / 2024 நவம்பர் 20 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் முகமாக, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் இலங்கையர்களின் அரசாங்கம் என்றும் சிங்களவர்கள், முஸ்லிம்கள் அல்லது தமிழர்களின் அரசாங்கம் அல்ல எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இது நியாயமற்ற விமர்சனம் என்றும், NPP க்குக் கிடைத்த மக்கள் ஆணையை அவமதிப்பதாகவும் கூறினார்.
76 ஆண்டுகளில் அனைத்து சமூகங்களும் தங்களது மத, கலாசார வேறுபாடுகளை மறந்து ஒரே நாடாக வாக்களித்து பெரும்பான்மை ஆட்சியைத் தேர்ந்தெடுப்பது இதுவே முதல் முறை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
NPP அரசாங்கம் எந்தவொரு சமூகத்தையும் அவர்களின் மத அல்லது கலாச்சார நடைமுறைகளின் அடிப்படையில் ஒருபோதும் பாகுபாடு காட்டாது என்று வலியுறுத்திய அமைச்சர் ரத்நாயக்க, அது தமது அரசாங்கத்தின் புத்தகங்களிலும் இல்லை என்றும் கூறினார்.
அமைச்சரவையில் முஸ்லிம் எம்.பி.க்கள் இல்லாதது தொடர்பான விமர்சனங்கள் தொடர்பில் அமைச்சர் ரத்நாயக்க கூறுகையில், பல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏனைய சமூகங்களைச் சேர்ந்த பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
“கல்முனை, சம்மாந்துறை, வட மாகாணம் மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றோம்.
முதல் தடவையாக மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
கம்பஹா மாவட்டத்திலும் இதே நிலைதான். கண்டி மாவட்டத்தில் இரண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதற்கு முன்னர் ஒருபோதும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினருக்கு வாக்களிக்காத மாவட்டங்களில் இருந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.
திகாமடுல்ல, சம்மாந்துறை, கல்முனை, அக்கரைப்பற்று ஆகிய தொகுதிகளில் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்” என அவர் தெளிவுபடுத்தினார்.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.
NPP அரசாங்கம் அத்தகைய இன அல்லது சமூகப் பாகுபாடுகளை எந்த வகையிலும் ஒப்புக் கொள்ளாது என்று அவர் வலியுறுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
16 minute ago
21 minute ago
34 minute ago