2025 மார்ச் 12, புதன்கிழமை

’’NPP எம்.பிக்களுக்க சம்பள இலஞ்சம்’’

Editorial   / 2025 பெப்ரவரி 08 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை அரசே இல்லாதொழித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியிள் 159 பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் முழுமையான காசோலையில் மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி காரியாலயத்துக்கு செல்கிறது. அங்கிருந்து தான் இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது..இதை இலஞ்சம் என்றே குறிப்பிட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்திஎம்.பி. தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை(07) இடம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நீக்குதல் குறித்த தனிநபர் இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுபவர்கள் தமக்குரிய அனைத்து கொடுப்பனவுகளையும் பெறுகிறார்கள். கொடுப்பனவுகளை இரத்துச் செய்ய வேண்டும் என்று கூச்சலிடுவதற்கு முன்னர் சித்ரசிறி அறிக்கையின் பரிந்துரைகளை படித்துப் பாருங்கள். ஆகவே கொண்டு வரும் புதிய சட்டமூலம் கடந்த காலத்துக்கு செல்வாக்கு செலுத்தாது. அதுபோல் தற்போதுள்ள ஆளும் தரப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அவர்களும் ஓய்வூதிய கொடுப்பனவுகளை பெறுவார்கள். ஆகவே புதிய சட்டமூலத்துக்கு கைகளை மாத்திரமல்ல, இரண்டு கால்களை உயர்த்தி ஆதரவு வழங்கினாலும் ஆளும் தரப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .