Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Editorial / 2023 பெப்ரவரி 02 , பி.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பசுமையான இலங்கை (Clean and Green city Srilanka ) எனும் தொணிப்பொருளில் நகர தூய்மையாக்கல் வேலைத்திட்டம் இன்றிலிருந்து ஒருவாரத்துக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் வளர்ச்சியில் இளம் சந்ததியினரின் பங்களிப்பு, தலையீட்டை பெற்றுக்கொள்ளும் பொருட்டு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் எண்ணக்கருவுக்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
இலங்கையின் சகல பிரதேச செயலகப்பிரிவுகளில் இருந்தும் ஒவ்வொரு நகரங்களை தெரிவுசெய்து இந்தத் திட்டத்தை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இச்சிரமாதான வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் அவர்களின் தலைமையில் நாளை (03) காலை திகதி 9 மணிக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பிரதான காரியாலயத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன் பின்னர் மஹரகம நகரின் 5 இடங்களில் நகர தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago