Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2024 ஒக்டோபர் 03 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
2020 ஓகஸ்ட் 20ஆம் திகதி முதலாவது அமர்வில் ஆரம்பமாகி 2024 செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கலைக்கப்பட்ட ஒன்பதாவது பாராளுமன்றத்தின் காலப் பகுதியில் அரசியலமைப்பின் 66வது உறுப்புரைக்கு அமைய 19 பாராளுமன்ற உறுப்புரிமைகளுக்கான வெற்றிடம் ஏற்பட்டது.
இதற்காக 18 சந்தர்ப்பங்களில் 16 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இதற்கு அமைய 241 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட ஜயந்த கெட்டகொட இராஜினாமாச் செய்ததுடன், இவருக்குப் பதிலாக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார்.
தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமாச் செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஜயந்த கெட்டகொட மீண்டும் நியமிக்கப்பட்டார். இதேபோன்று, முஜிபுர் ரஹ்மான் இராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஏ.எச்.எம்.பௌசி நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே நீதிமன்ற உத்தரவின் பெயரில் உறுப்புரிமையை இழந்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு முஜிபுர் ரஹ்மான் மீண்டும் நியமிக்கப்பட்டார். எனினும், ஹரீன் பெர்னான்டோவின் வெற்றிடத்திற்கு புதிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படவில்லை.
மிகவும் தனித்துவமான நிகழ்வுகளால் மக்களின் கவனத்தை ஈர்த்திருந்த ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இடம்பெற்ற முக்கியமான நிகழ்வாக இந்நாட்டின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமாச் செய்ததுடன், 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டமையாகும்.
இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்டதும் அவருடைய பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்குப் புதிய உறுப்பினராக வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டமை உள்ளடங்கலாக 16 பேர் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
இல |
பாராளுமன்ற உறுப்பினரின் பெயர் மற்றும் விலகுவதற்கான காரணம் |
உறுப்பினர் பதவி வெற்றிடமாவதற்கான காரணம் |
வெற்றிடத்திற்காக நியமிக்கப்பட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினரின் பெயர் |
01 |
ஜயந்த கெட்டகொட |
இராஜினாமாச் செய்தமை |
பசில் ராஜபக்ஷ |
02 |
அஜித் நிவாட் கப்ரால் |
இராஜினாமாச் செய்தமை |
ஜயந்த கெட்டகொட |
03 |
மஹிந்த சமரசிங்க |
இராஜினாமாச் செய்தமை |
லலித் வர்ணகுமார |
04 |
பசில் ராஜபக்ஷ |
இராஜினாமாச் செய்தமை |
தம்மிக பெரேரா |
05 |
முஜிபுர் ரஹ்மான் |
இராஜினாமாச் செய்தமை |
ஏ.எச்.எம்.பௌசி |
06 |
சமிந்த விஜேசிறி |
இராஜினாமாச் செய்தமை |
நயன வாசலதிலக |
07 |
உத்திக பிரேமரத்ன |
இராஜினாமாச் செய்தமை |
எச்.சீ.முத்துகுமாரன |
08 |
தலதா அதுகோரள |
இராஜினாமாச் செய்தமை |
கருணாரத்ன பரனவிதானகே |
09 |
ரஞ்ஜன் ராமநாயக |
அரசியலமைப்பின் 89 மற்றும் 91 உறுப்புரைகளில் குறிப்பிடப்பட்டதற்கு அமைய தகுதி நீக்கம் செய்யப்படல் |
அஜித் மான்னப்பெரும |
10 |
டயனா கமகே |
அரசியலமைப்பின் 89 மற்றும் 91 உறுப்புரைகளில் குறிப்பிடப்பட்டதற்கு அமைய தகுதி நீக்கம் செய்யப்படல் |
முஜிபுர் ரஹ்மான் |
11 |
நசீர் அஹமட் |
கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கியமை |
அலி சாஹிர் மௌலானா |
12 |
மனுஷ நாணயக்கார |
கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கியமை |
பந்துல லால் பண்டாரிகொட |
13 |
ஹரீன் பெர்னாந்து |
கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கியமை |
புதிய உறுப்பினர் நியமிக்கப்படவில்லை |
14 |
அமரகீர்த்தி அதுகோரல |
உயிரிழந்தமை |
ஜகத் சமரவிக்ரம |
15 |
சனந் நிஷாந்த அவர்கள் |
உயிரிழந்தமை |
ஜகத் பிரியங்கர |
16 |
எச்.நந்தசேன |
உயிரிழந்தமை |
எம்.ஜே.வீரசேன |
17 |
இரா.சம்பந்தன் |
உயிரிழந்தமை |
கே.எஸ்.குகதாசன் |
18 |
ரணில் விக்ரமசிங்க அ |
ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்டமை |
வஜிர அபேவர்தன |
19 |
அநுர குமார திசாநாயக்க |
ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்டமை |
லக்ஷ்மன் நிபுணாரச்சி |
அத்துடன், ஒன்பதாவது பாராளுமன்றத்தில் கூட்டத்தொடர்கள் நான்கு தடவைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் இரண்டு தடவைகள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பாராளுமன்றக் கூட்டத்தொடர்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
மூன்றாவது மற்றும் நான்காவது தடவைகள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தில் 5 கூட்டத்தொடர்கள் காணப்பட்டன.
2020.08.20 முதல் 2021.12.12 வரை முதலாவது கூட்டத்தொடரும்,
2022.01.18 முதல் 2022.07.28 வரை இரண்டாவது கூட்டத்தொடரும்,
2022.08.03 முதல் 2023.01.27 வரை மூன்றாவது மூட்டத்தொடரும்,
2023.02.08 முதல் 2024.01.26 வரை நான்காவது கூட்டத்தொடரும்,
2024.02.07 முதல் 2024.09.24 வரை ஐந்தாவது கூட்டத்தொடரும் நடைமுறையில் இருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
2 hours ago