Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Mayu / 2023 டிசெம்பர் 07 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி மாவட்டத்தில் சில பகுதிகளில் கட்டுப்பாட்டு விலையை மீறி சீனி மற்றும் அரிசி ஆகியவற்றை கூடிய விலைக்கு விற்பனை செய்த 77 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, பலாங்கொட, பெல்மதுல்ல,எம்பிலிப்பிட்டிய கலவான மற்றும் இறக்குவான ஆகிய பகுதிகளில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோஸ்தர்கள் திடீர் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.
இதன்போது, விலைப்பட்டியலை நுகர்வோருக்கு காட்சிப்படுத்தாத மற்றும் கட்டுப்பாட்டு விலையை விட கூடுதலான விலைக்கு சீனி மற்றும் அரிசி ஆகியவற்றை விற்பனை செய்த 77 வர்த்தகர்களுக்கு எதிராக அவ்வப் பிதேச நீதி மன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பிரதானி உதய நாமல்கம தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
27 minute ago
28 minute ago
39 minute ago