2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

70 கிலோ கேரள கஞ்சா மீட்பு

Freelancer   / 2025 மார்ச் 27 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட கிட்டத்தட்ட 70 கிலோ கிராம் எடையுள்ள 33 கேரள கஞ்சா பொதிகள், இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை, திக்கம் கடற்கரையில் கைப்பற்றப்பட்டன. 

யாழ்ப்பாண இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், வெல்வெட்டித்துறை பொலிஸாருடன் இணைந்து நடத்தப்பட்ட நடவடிக்கையில், இந்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன. 

இதன் மதிப்பு சுமார் 13.5 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. 

வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X