Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Editorial / 2023 ஏப்ரல் 19 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
டீ.கே.பி கபில
ஹெரோய்ன் போதைப்பொருளுக்கு பதிலாக பயன்படுத்தப்படும் ஒரு வகையான குளிசைகள், கட்டுநாயக்க பொலிஸ் போதைப்பொருள் பிரிவின் அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை (18) கைப்பற்றப்பட்டுள்ளது.
சுங்கத்தை கடந்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளியேறிகொண்டிருந்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டியைச் சேர்ந்த 40 வயதான இவர், அடிக்கடி விமானத்தில் பயணிக்கும் வர்த்தகர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
அவர் தனது இரண்டு பயணப் பொதிகளில் மறைத்து வைத்து எடுத்துவந்த ப்ரிகெப் -150 என்ற இந்த போதையூட்டும் குளிசைகள் 60,460, கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை இளைஞர்கள் ஹெரோய்னுக்கு அடிமையாக்கும் முன்னர் இவ்வாறான குளிச்சைகளே விசேடமாக வழங்கப்படுகின்றன. இந்த வகை குளிசையொன்றி உள்ளூர் விலை 300 ரூபாயாகும் என பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதையூட்டும் குளிசைகளின் உள்நாட்டு சந்தையின் மொத்த பெறுமதி, ஒருகோடியே 81 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாயாகும்.
இந்த வர்த்தகர், செவ்வாய்க்கிழமை (18) அதிகாலை 1.59க்கு சென்னையில் இருந்து வந்த இண்டிக்கோ விமானச் சேவைக்கு சொந்தமான 6 ஈ 1117 என்ற விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையைத்தை வந்தடைந்துள்ளார்.
இலங்கைக்கு ஒளடதங்களை இறக்குமதி செய்வதற்கு சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் உரிய அனுமதியுடன் கூடிய வைத்தியர்களின் அனுமதி தேவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட வர்த்தகரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த கட்டுநாயக்க பொலிஸ் போதைப்பொருள் பிரிவின் அதிகாரிக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago