2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

6 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன், மரிஜூவா சிக்கியது

Editorial   / 2023 நவம்பர் 21 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

  6 கோடியே 69 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் மற்றும் மரிஜூவா போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 அமெரிக்காவிலிருந்து கொழும்பு, ட்ரைக்கோ விமான பொதி  தபால் நிலையத்திற்கு, (க்ளியரிங் ஹவுஸுக்கு)   அனுப்பப்பட்ட நிலையில். செவ்வாய்க்கிழமை (21)  சுங்க வருவாய் கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்றால் கைப்பற்றப்பட்டுள்ளது என சுங்க ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சுங்க பணிப்பாளர் சிவலி அருக்கொட தெரிவித்தார்.

இந்த விமான அஞ்சல் பொதி  கம்பஹா பகுதியில் உள்ள பெண்ணொருவரின் குடியிருப்பு முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சந்தேகத்துக்கு இடமான பொதி கொழும்பில் உள்ள ட்ரைகோ நிறுவனத்தில் இன்று (21) திறக்கப்பட்டது. அதில், 05 கிலோ 161 கிராம் மரிஜூவா  மற்றும் 511 கிராம் கொக்கெய்ன் என்பன உணவு டின்னில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுங்க வருமான கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

 கம்பஹா பகுதியைச் சேர்ந்த பெண்ணின் எழுத்துப்பூர்வ அனுமதியுடன் இந்த பொதியை பெற்றுக் கொள்வதற்காக ட்ரைகோ நிறுவனத்திற்கு வந்த கொழும்பு, வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரும் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் உதவி சுங்க அத்தியட்சகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

               மேலதிக விசாரணைகளுக்காக இந்த போதைப்பொருள் தொகை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

டி.கே.பி கபில


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .