2025 பெப்ரவரி 22, சனிக்கிழமை

5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

Freelancer   / 2025 பெப்ரவரி 21 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் வைத்து கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட விசேட அதிரடி படையினரும், மருதங்கேணி பொலிஸாரும் இணைந்து இந்த கைது நடவடிக்கையை நேற்று மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்டவர் வடமராட்சி கிழக்கு  கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் அவரிடம் இருந்து 5 கிலோ 660 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் மேலதிக  சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X