2025 ஏப்ரல் 14, திங்கட்கிழமை

4 வயதான சிறுமியை ஓடை விழுங்கியது

Janu   / 2024 ஒக்டோபர் 08 , பி.ப. 04:51 - 0     - 131

தங்கொட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யோகியான, வேகட பிரதேசத்தில் நான்கு வயதுடைய அனன்யா பாரமி என்ற சிறுமி, செவ்வாய்க்கிழமை (08) பிற்பகல் தனது வீட்டின் பின்புறம் உள்ள பாதுகாப்பற்ற ஓடைக்குள்   தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

 முன்பள்ளிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்த சிறுமியை குளிப்பாட்டுவதற்காக அவரது பாட்டி தண்ணீர் சுடவைப்பதற்காக சென்றபோது, ​​சிறுமி ஓடைக்குள்  தவறி விழுந்திருக்கலாம் என  சந்தேகிக்கின்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது உயிரிழந்த சிறுமியின் தாய் மற்றும் தந்தை வீட்டில் இல்லை என தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக  விசாரணைகளை தங்கொட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X