2025 பெப்ரவரி 24, திங்கட்கிழமை

4 லட்சம் சுற்றுலாப்பயணிகள் வருகை

Freelancer   / 2025 பெப்ரவரி 24 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 428,197 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
 
ஜனவரி மாதத்தில் மாத்திரம் 252,761 பேர் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளனர்.
 
பெப்ரவரி மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 175,436 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர் என  சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
 
பெப்ரவரி மாதத்தில் இந்தியாவிலிருந்தே அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளனர்.
 
இதன்படி, இந்தியாவிலிருந்து 25,293 பேரும், ரஷ்யாவிலிருந்து 22,280 பேரும் பிரித்தானியாவிலிருந்து 18,785 பேரும், ஜேர்மனியிலிருந்து 12,393 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. (a)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X