2025 பெப்ரவரி 05, புதன்கிழமை

4 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு

Freelancer   / 2025 ஜனவரி 19 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலையால் 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 15ஆம் திகதி முதல் பெய்து வரும் கனமழை காரணமாக அநுராதபுரம், கிளிநொச்சி, கேகாலை மற்றும் காலி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த மாவட்டங்களில் 319 குடும்பங்களைச் சேர்ந்த 603 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கேகாலை மற்றும் காலி மாவட்டங்களில் நிலவும் மோசமான வானிலை காரணமாக  4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாவட்டங்களில் 71 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர்  பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X