2025 ஜனவரி 14, செவ்வாய்க்கிழமை

4 மாதங்களுக்கு 9,60,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு

Editorial   / 2024 டிசெம்பர் 04 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்துக்கு 2025 ஜனவரி  1 ஆம்  திகதியிலிருந்து  2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம்  திகதி வரையான 4 மாத காலப் பகுதிக்கான கணக்கு வாக்குப்பதிவாக 9,60,500 கோடி ரூபாய்  ஒதுக்கப்பட்டுள்ளது

இதில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்கென 20,801 கோடியே 9,575,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  இந்த நிதியிலிருந்து ஜனாதிபதியின் செயல்முறை மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக 127 கோடியே 9,940,000 ரூபாவும் பிரதமர் அலுவலகத்துக்காக 37 கோடியே 80 இலட்சம் ரூபாவும் நிதி அமைச்சுக்காக 18,603 கோடியே 1,812,000 ரூபாவும் பாதுகாப்பு அமைச்சுக்காக 14,295கோடியே 50 இலட்சம் ரூபாவும் நீதி,தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்காக 1,727 கோடியே 3,160,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.  

சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்காக 16,199 கோடியே 9,998,000 ரூபாவும் கல்வி,உயர்கல்வி அமைச்சுக்காக 9,200 கோடி ரூபாவும் பொது நிர்வாக ,மாகாண சபைகள் அமைச்சுக்காக 17,047 கோடியே 6,415,000 ரூபாவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுக்காக 6,506 கோடியே 4,575,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று புத்தசாசன சமய கலாசார அமைச்சுக்கு 323கோடியே63 இலட்சம் ரூபாவும் வெளிநாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சுக்கு 592 கோடியே 7,350,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

வர்த்தக வாணிப அமைச்சுக்கு 88 கோடியே 57 இலட்சம் ரூபாவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு 22,007கோடியே 50 இலட்சம் ரூபாவும் கமத்தொழில்,கால்நடை,காணி ,நீர்பாசன அமைச்சுக்கு 6,736 கோடியே 10 இலட்சம் ரூபாவும் வலுசக்தி அமைச்சுக்கு 4,330கோடியே 550,000 ரூபாவும் நகர அபிவிருத்தி,நிர்மாணிப்பு  வீடமைப்பு அமைச்சுக்கு  1,719 கோடியே 4,920,000 ரூபாவும்  பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு அமைச்சுக்கு 365 கோடியே 20 இலட்சம் ரூபாவும் மிகுதி  ஏனைய அமைச்சுகளுக்கும்  ஒதுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X