2025 பெப்ரவரி 05, புதன்கிழமை

4 பொலிஸ் அதிகாரிகள் அதிரடியாக பணிநீக்கம்

Freelancer   / 2025 பெப்ரவரி 04 , பி.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தில்ஷான் மதுசங்க என்ற இளைஞன் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, சுமார் 6 நாட்கள் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸ் அதிகாரிகளின் பணிகளை இடைநிறுத்த பதில் பொலிஸ்மா அதிபர் இன்று (04) நடவடிக்கை எடுத்துள்ளார்.

வீரகெட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, கும்புறுபிட்டிய பல்வேறு முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் கல்கிஸ்ஸை பொலிஸ் சார்ஜென்ட் ஆகியோரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நான்கு பொலிஸ் அதிகாரிகளையும் தலா 25,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு மாத்தறை மேல் நீதிமன்றம் ஜனவரி 27 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

மாத்தறை, மாலிம்பட பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியபோது தில்ஷான் மதுசங்க என்ற இளைஞன் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் இந்த அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்த நிலையில் வழக்கு விசாரணை பெப்ரவரி 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X