Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 24, திங்கட்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 24 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் 4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளன. பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே இடம்பெற்று வரும் இந்த கொலைக் கலாசாரம் தேசிய பாதுகாப்பிற்குப் பிரச்சினையே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு தெரிவித்ததார்.அவர் மேலும் கூறுகையில்
கடந்த 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையிலான 4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளன. தேசிய பாதுகாப்புக்கு இது பெரும் பிரச்சினையாக அமைந்திருந்தாலும், அது ஒரு பிரச்சினையல்ல என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே இடம்பெற்று வரும் இந்த கொலைக் கலாசாரம் தேசிய பாதுகாப்பிற்குப் பிரச்சினையாகவே காணப்படுகிறது.
அண்மைய தினத்தில் நீதிமன்றத்தினுள் நடந்த மிலேச்சத்தனமான கொலையுடன் தொடர்புடைய பெண்ணின் வண்ணப் புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் புலனாய்வு தரப்பிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இது தொடர்பிலான புலனாய்வு அறிக்கைகளை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன. குறித்த கொலை தொடர்பிலான தகவல்கள் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்றிருந்தன. இவ்வாறு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தும் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டமை குறித்து தெளிவான விளக்கம் இங்கு வழங்கப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago