Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 05 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த அரசாங்கத்தில் நாடு முழுவதும் 361 மதுபான சாலைகளுக்கான அரசியல் இலஞ்சமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க, பாராளுமன்றத்தில், புதன்கிழமை (04)தெரிவித்தார்.
அதில், வடக்கு மாகாணத்திற்கு 32 மதுபான சாலைகளுக்கான அனுமதிகளும் கிழக்கு மாகாணத்திற்கு 22 மதுபான சாலைகளுக்கான அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த அரசில் அரசியல் இலஞ்சமாக பலருக்கு மதுபான சாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன .அவற்றை வெளியிடும் எனக் கூறியிருந்தோம்.அதற்கமைய அந்த விபரங்களை இந்த சபைக்கு சமர்ப்பிக்கின்றேன். இதனை சகலரும் அறிந்து கொள்ள முடியும்
இந்த விபரத்தின்படி மேல் மாகாணத்தில் 110 மதுபானசாலைகளுக்கான அனுமதிகளும் தென்மாகாணத்தில் 48, வடக்கு மாகாணத்தில் 32, கிழக்கு மாகாணத்தில் 22,மத்திய மாகாணத்தில் 45,வட மத்திய மாகாணத்தில் 14,ஊவா மாகாணத்தில் 30 ,வடமேல் மாகாணத்தில் 30 சப்ரகமுவ மாகாணத்தில் 30 என 361 மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளன.
அதேபோன்று சில்லறை மதுபான விற்பனைக்கான அனுமதிகளாக கொழும்பு 2,கம்பஹா 8,களுத்துறை 8,காலி 9,மாத்தறை 5,அம்பாந்தோட்டை 5,யாழ்ப்பாணம் 5, கிளிநொச்சி 16,வவுனியா 2,மன்னார் 2,திருகோணமலை 4,மட்டக்களப்பு 1,அம்பாறை5 ,கண்டி 11,மாத்தளை 6,நுவரெலியா 8,அனுராதபுரம் 4,பொலநறுவை 3,புத்தளம் 6,குருநாகல்8,பதுளை 9,மொனராகலை 7,இரத்தினபுரி 6,கேகாலை 2 என 172 அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவுக்கு வழங்கப்படவில்லை என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago