2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

3-ம் உலக போருக்கான திகதியை அறிவித்தார் பிரபல ஜோதிடர்

Editorial   / 2024 ஓகஸ்ட் 05 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி, இந்தியாவின் பிரபல ஜோதிடராக அறியப்படுபவர் குஷால் குமார். இந்தியாவின் நாஸ்ட்ரடாமஸ் என அறியப்படுபவர். இதற்கு முன் ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரை கணித்தவர்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போரையும் முன்கூட்டியே அறிவித்தவர் இந்த போர்களால் உலகம் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, உணவு தட்டுப்பாடு போன்றவை ஏற்பட்டன. கொரோனா பெருந்தொற்றில் இருந்து உலகம் மீண்டு வந்த சூழலில், இந்த போர்கள் ஆப்பிரிக்கா போன்ற வளர்ச்சி அடையாத நாடுகளை பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாக்கி விட்டன.

இந்த நிலையில், 3-ம் உலக போர் தொடக்கம் பற்றிய தேதியை குஷால் அறிவித்து உள்ளார். அவருடைய கணிப்பின்படி, இந்த போர் இன்று அல்லது நாளை தொடங்கும் ஆகஸ்டு 4 அல்லது ஆகஸ்டு 5 ஆகிய இரு தேதிகளில் போர் தொடங்கும் என அவர் கூறினார். அவருடைய கணிப்பின்படி, அந்த நாள் இன்று தொடங்குகிறது ஆனால், அது மெய்யாவதற்கான சாத்தியங்கள் பின்னரே தெரிய வரும். இதற்கு முன்பும் அவர் பல முறை 3-ம் உலக போர் தொடங்கும் திகதியை அறிவித்துள்ளார் இதன்படி, நடப்பு ஆண்டின் ஜூன் 18-ந்திகதி போர் தொடங்கும் என கூறினார்.

ஆனால், அன்று எதுவும் நடக்கவில்லை. இதன்பின், புதிய திகதியை அறிவித்த அவர், ஜூலை 26 அல்லது ஜூலை 28 ஆகிய நாட்களில் ஏதேனும் ஒரு திகதியில் 3-ம் உலக போர் தொடங்கும் என கணிப்பு வெளியிட்டார். ஆனால், அதுவும் தவறாகி போனது இஸ்ரேல் மீது போரை தொடுக்க ஈரான் தலைவர் அலி காமினி உத்தரவிட்டு சில தினங்கள் ஆன நிலையில், பிரபல ஜோதிடரின் 3-ம் உலக போர் பற்றிய அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .