Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
S.Renuka / 2025 ஏப்ரல் 27 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த ஆண்டு நடைபெற்ற (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 9,457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் 'ஏ' சித்தியைப் பெற்றதாக பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.
மேலும், மூன்று பாடங்களிலும் 'ஏ' சித்திகளைப் பெற்ற மாணவர்களின் சதவீதம் 3.45 சதவீதம் என்றும் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர இவ்வாறு தெரிவித்தார்.
பெறுபேறுகளின்படி, பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளில் 64.73 சதவீதமானவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பல்கலைக்கழக சேர்க்கைக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு 274,361 பரீட்சார்த்திகள் தோற்றியதாகவும், அவர்களில் 177,588 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், தேர்வில் 222,774 பள்ளி பரீட்சார்த்திகளும் 51,587 தனியார் பரீட்சார்த்திகளும் பங்கேற்றதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், பரீட்சையில் 3 முக்கிய பாடங்களிலும் மொத்தம் 29,244 பரீட்சார்த்திகள் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
27 Apr 2025
27 Apr 2025
27 Apr 2025