2025 ஜனவரி 14, செவ்வாய்க்கிழமை

27 மில்லியன் வரி நிலுவை குறித்து விசாரணை

Simrith   / 2025 ஜனவரி 14 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர சபையின் (CMC) கீழ் வாகனத் தரிப்பிடங்களை நிர்வகிக்கும் 26 நிறுவனங்கள், மாநகர சபைக்கு கிட்டத்தட்ட 27 மில்லியன் ரூபாய் நிலுவை வைத்துள்ளமை தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மாநகர ஆணையாளர் அறிக்கையொன்றைக் கோரியுள்ளதுடன், அறிக்கையில் உள்ள சான்றுகள் மற்றும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களை கருத்திற்கொண்டு முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மோசடி, ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் இயக்கத்தினால் இந்த விடயம் தொடர்பான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த 26 நிறுவனங்களும் 2023 இல் ஏறத்தாழ 204,164,110 ரூபாய் CMC க்கு சொந்தமான வாகன நிறுத்துமிடங்களுக்கு செலுத்த வேண்டியிருந்த போதிலும், அந்த நிறுவனங்கள் 2024 இல் மீண்டும் வாகன நிறுத்துமிடங்களின் நிர்வாகத்தைப் பெற்றுள்ளன.

அந்த முறைப்பாட்டில், குறித்த நிறுவனங்கள் 2024 ஏப்ரல் இறுதிக்குள் CMC க்கு செலுத்த வேண்டிய வரி நிலுவை கிட்டத்தட்ட ரூ. 264,859,471 ஆகும்.

மேற்படி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் வெளிப்படைத் தன்மை இல்லை என தெரிவித்து, சிவில் சமூக குழுவானது, விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X