Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2025 ஏப்ரல் 22 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்கும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் நால்வர் கொண்ட பொலிஸ் குழுவொன்றை நியமித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மானதுங்க, செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில், செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட இந்த குழுவிற்கு தலைமைதாங்குகின்றார்.சிஐடிக்கு பொறுப்பான பிரதிபொலிஸ்மா அதிபர்,சிஐடியின் இயக்குநர், பயங்கரவாத விசாரணை பிரிவின் இயக்குநர் ஆகியோரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
பிரதான குழுவின் கீழ் மேலும் பல உப-குழுக்களை உருவாக்கியுள்ளோம் ஆணைக்குழுவின் அறிக்கையை பிரதான குழு ஏற்கனவே ஆராய ஆரம்பித்துள்ளது.
66,000-68,000 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை ஆராய்ந்த பின்னர் கிடைக்கும் புதிய விடயங்கள் குறித்து புதிய விசாரணைகளை முன்னெடுப்போம். அதனடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .