2025 மார்ச் 06, வியாழக்கிழமை

200 கிலோ கேரள கஞ்சா மீட்பு

Freelancer   / 2025 மார்ச் 05 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 200 கிலோ எடையுடைய கேரள கஞ்சா நேற்று (4) மீட்கப்பட்டுள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் வத்திராயன் கடற்கரை பகுதி கடற்படையின் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்த தேடுதலின்போது கடத்திச் செல்வதற்காக தயார் நிலையில் காணப்பட்ட 123 கிலோ கேரள கஞ்சா முதலில் மீட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேலும் கஞ்சா மீட்கப்பட்டது. மொத்தமாக 200 கிலோ கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. மீட்கப்பட்ட கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .