2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

2 வயதிலேயே வேலை தேடும் குழந்தை

Editorial   / 2024 ஓகஸ்ட் 29 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

  2 வயதிலேயே வேலை தேட வேண்டிய அழுத்தம் தொடங்கிவிட்டதாக கூறி ஒரு குழந்தை லிங்கிட்இன் தளத்தில் இணைந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த டைகர் சௌகான் என்ற அந்த குழந்தை, தனக்கான எதிர்காலத்தை தேடி கண்டுபிடிப்பதற்காக இங்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி கருத்து கூறிய நெட்டிசன்கள், ஏற்கனவே 2 வருடம தாமதம் ஆகிவிட்டதாக கிண்டல் செய்துள்ளனர்.

லிங்க்ட்இன் என்பது வியாபாரம் மற்றும் வணிகத்தை பெருக்கவும், வேலைவாய்ப்பிற்காகவும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளம் ஆகும். இந்த லிங்க்ட்இன் தளத்தில் இரண்டு வயது குழந்தை இணைந்துள்ளது. இதை நெட்டிசன்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.. என்னங்க சொல்றீங்க.. 2 வயது குழந்தை வேலை தேடுதா.. ஆமாம்.. நீங்கள் நினைப்பது சரி தான். ஒரு குழந்தை தற்போது உள்ள வேலைக்கான அழுத்தத்தை சுட்டிக்காட்டும் வகையில் லிங்க்ட்இன் தளத்தில் இணைந்துள்ளது.

 

டெல்லியைச் சேர்ந்த டைகர் சௌகான் என்ற குழந்தையின் லிங்கிட் இன் சுயவிவரத்தில் "இந்த உலகில் தனக்கான இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று இந்த குழந்தை தேடுகிறது" என்று கூறப்பட்டுள்ளது. லிங்க்ட்இன்-இல் குழந்தை டைகரின் இந்த முதல் பதிவு வேகமாக பரவி வருகிறது. ஃபிரி ஸ்கூலுக்கு போக தயாராகி கொண்டிருக்கும் அந்த குழந்தை, ஏற்கனவே உலகம் வேலைக்காக எதிர்கொண்டுள்ள அழுத்தத்தை எப்படி உணரத் தொடங்கியுள்ளது என்பதையும் தனது பதிவில் பகிர்ந்துள்ளது (குழந்தையின் பெயரில் பகிரிப்பட்டுள்ளது). அந்த குழந்தையின் லிங்க்ட்இன் சுயவிவரத்தில், மக்களுடன் இணையவும், தனது வாழ்க்கையைத் தொடங்கவும் உருவாக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை டைகர் சவுகான் பெயரியல் லிங்க்டு இன் தளத்தில் போட்ட பதிவில், "இன்று எனக்கு இரண்டு வயதாகிறது, ஏற்கனவே இந்த உலகில் உள்ள வேலைக்கான அழுத்தத்தை உணர ஆரம்பித்தேன். என்னை பள்ளியில் சேர்க்க வீட்டில் விரும்புகிறார்கள். இப்போதே அதை பற்றிபேச ஆரம்பித்து விட்டார்கள்

.
என்னடைய தந்தை சிவேஷ் குமாரின் நண்பர் பிரவீன் குமார் ராஜ்பர் எப்போதும் "நெட்வொர்க் நெட்வொர்க்" என்று கூறிக்கொண்டே இருப்பார். எனவே நான் ஒரு நல்ல பிரி ஸ்கூலில் சேர வேண்டும் என்பதற்காக இந்த சமூக வலைதளத்திற்கு நான் வந்துள்ளேன். எனினும் நான் இந்த சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருக்க முயற்சிக்கிறேன் (ஏனென்றால் எனக்கு வீட்டில் யாரும் செல்போன் தருவதில்லை), ஆனாலும் நான் வாரத்திற்கு ஒருமுறை லிங்கிட் இன் தளத்திற்கு வருவதற்கு முயற்சிப்பேன். அதற்கான எல்லா முயற்சிகளையும் நிச்சயம் செய்வேன்." என்று குழந்தை டைகர் சௌகான் கூறியுள்ளார்.

டைகர் சௌஹானின் லிங்கிட்இன் சுயவிவரத்தில், கல்வி செக்சனின் கீழ் டெல்லி பப்ளிக் பள்ளி, ஆர்.கே.புரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுபவம் என்ற செக்சனில், டைகர் தனது தந்தையின் ஸ்டார்ட்அப்பான காஃபியா இந்தியாவில் ஒரு பொழுதை போக்குபவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பல நெட்டிசன்கள் டைகர் சௌகானை லிங்க்ட்இன் தளத்திற்கு வந்துள்ளதை வரவேற்றனர். ஒரு சில நெட்டிசன்கள், அவர் இரண்டு ஆண்டுகள் தாமதமாக வந்திருப்பதாக கூறியுள்ளனர். இந்தப் பதிவிற்கு பலரும் கேலியும் கிண்டலும் செய்து பதிலளித்து வருகிறார்கள்.

டைகர் சௌகான் குறித்து நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், " 2 வயதிலேயே டைகர் வந்திருப்பதை நான் நல்லது என்று நினைக்கிறேன் . ஏனெனில் உங்களுக்கு 22 வயதாகும்போது,​​உங்கள் 20 வருட அனுபவம் லிங்கிட் இன் தளத்தில் காட்டும். பொதுவாக நல்ல அனுபவம் பெற இந்த முயற்சி உங்களுக்கு தேவைப்படும்." என்றார். மற்றொரு நெட்டிசன், "குழந்தை டைகர் ஆண்டுகள் தாமதமாக வந்திருக்கிறார். அவர் யுபிஎஸ்சி தேர்வு எழுதம் கனவை மற்றும் ஐஐடியில் சேரும் கனவிற்கு பயிற்சியை இப்போதே தொடங்க வேண்டும், இல்லையெனில் அவர் வாய்பை தவறவிடுவார்" என்று கிண்டல் செய்துள்ளார்.

நான்காவது நெட்டிசனோ, தம்பி உனக்கு சம்பளத்திற்கு, டயப்பர்களாக வாங்கி தந்துவிடலாமா என்று கேலி செய்துள்ளார். மற்றொரு நெட்டினோ, "உண்மையான இந்த உலகிற்கு உன்னை மனப்பூர்வமாக வரவேற்கிறோம், டைகர், நீ இரண்டு வயதில் ஏற்கனவே இந்த சமூக வலைதள விளையாட்டில் முன்னிலையில் இருக்கிறாய். எங்களில் பெரும்பாலானோர் பலர், வயதாகி, நரை முடி விழுந்த பிறகுதான் இந்த நெட்வொர்க் தளங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்தோம். நீ குழந்தையாக இருக்கும் போதே இதில் சேர்ந்துவிட்டாய், நீ பெரிய உயர்த்தை அடைவாய் என்று நான் வாழ்த்துகிறேன். ஒன்றை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள், எந்த நேரத்திலும் அழுத்தத்திற்கு ஆளாகிவிடாதே" என்று கூறினார்.

 

இன்னொரு நெட்டிசன், குழந்தை பேசுவது போல் பதிவிட்டிருக்கிறார். அதில் "நான் இன்று நான் எனது டயப்பரை நானே மாற்றிக்கொண்டேன், ஆல் இந்தியா டயப்பர் அசோசியேஷனில் இருந்து பெற்ற எனது சான்றிதழை இணைத்துள்ளேன், புதிய நாள் புதிய கற்றல் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய எனது பெற்றோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்." என்று கிண்டலாக கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .