2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

2 சிறுமிகள் துஷ்பிரயோகம்: பிக்கு சிக்கினார்

Editorial   / 2024 ஜூன் 17 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

12 மற்றும் 13 வயதுகளையுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், அப் பிரதேசத்தைச் சேர்ந்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தனமல்வில பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

தபால் மூலமாக கிடைத்த இரகசிய முறைப்பாட்டுக்கு அமைய​ மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், அவ்விரு சிறுமிகளையும், அவ்விரு சிறுமிகளின் தாய்மார்களையும் பொலிஸார் அழைத்து விசாரணைக்கு உட்படுத்தியதில் மேற்படி சம்பவம் அம்பலமானது.

உடல் ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் மன உபாதைகளுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டிக் கைது செய்யப்பட்ட பிக்குவை, நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (17) ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .