2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

2 சிசுக்களை விற்ற இளம் தாயும்: வாங்கிய 2 பெண்களும் கைது

Editorial   / 2023 டிசெம்பர் 07 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிறந்து நான்கு நாட்களேயான  இரண்டு சிசுக்களை விற்பனைச் செய்த இளம் தாய், அவ்விரு சிசுக்களையும் விலைக்கு வாங்கிய இரண்டு பெண்கள், வியாழக்கிழமை (07) காலை  கைது செய்யப்பட்டுள்ளனர் என ராகம பொலிஸார் தெரிவித்தனர்.

பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவரும், தலா 25,000 ரூபாய்க்கு இரண்டு சிசுக்களையும் வாங்கிய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களில் இரட்டை சிசுக்களில் ஒன்றை வாங்கிய பெண்ணொருவர் ராகம பிரதேசத்திலும் மற்றைய சிசுவை விலைக்கு வாங்கிய பெண், களனி பிரதேசத்திலும் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

ராகம பிரதேசத்தில் வீட்டு வேலை செய்து வந்த குறித்த தாய் கொழும்பு காசல் மகப்பேறு வைத்தியசாலையில் ஒரு வாரத்திற்கு முன்னர் இரட்டைக் சிசுக்களைப் பெற்றெடுத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .