2025 ஜனவரி 16, வியாழக்கிழமை

2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

Freelancer   / 2025 ஜனவரி 16 , மு.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,352 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.
 
இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 374 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
 
இதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 304 பேரும், காலி மாவட்டத்தில் 169 பேரும் பதிவாகியுள்ளனர்.
 
இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் இதுவரை டெங்கு நோயினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X