Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 மார்ச் 09 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச நிறுவனங்களில் எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சேமிப்பது தொடர்பான சுற்றறிக்கையை பொது சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ளது.
சுற்றறிக்கையின்படி, பிற்பகல் 02.30 மணிக்கு அரச நிறுவனங்களில் வளி சீராக்கிகள் (ஏ.சி) நிறுத்தப்படும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கூடுதல் எரிபொருள் கொடுப்பனவுகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கூட்டங்கள் மற்றும் பிற நோக்கங்களுக்காக வெளிமாவட்ட அதிகாரிகளை கொழும்புக்கு அழைப்பதை மட்டுப்படுத்துமாறும் சுற்றறிக்கையின் ஊடாக அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அலுவலகம் ஆரம்பித்து ஒரு மணி நேரத்துக்குப் பின்னர், வளிபதனாக்கியை (ஏ.சி) இயக்க வேண்டும் எனவும் காலை நேரத்தில் வெளிப்புற வெப்பநிலை குறைவாக இருப்பதால், ஜன்னல்களை திறந்து காற்றோட்டத்தைப் பெறுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பிற்பகல் 2.30 மணி முதல்மாலை 4.30 மணி வரையான காலப்பகுதியில் வளிபதனாக்கிகளை அணைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்தூக்கிகளின் பயன்பாட்டைக் குறைத்து முடிந்தவரை படிக்கட்டுகளைப் பயன்படுத்துமாறும் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளடன், அலுவலகங்களில் மின் உற்பத்திக்கு சூரிய சக்தியைப் பயன்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு நிறுவனங்களும் குளிரூட்டிகளுக்குப் பதிலாக முடிந்தவரை மின் விசிறிகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றன என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு அரச வாகனத்திலிருந்தும் நாளாந்தம் குறைந்தபட்சம் ஒரு லீற்றர் எரிபொருளைச் சேமிப்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
75,000க்கும் அதிகமான அரச வாகனங்கள் இயங்கும் நிலையில் காணப்படுவதால் ஒவ்வொரு வாகனத்திலிருந்தும் ஒரு நாளைக்கு ஒரு லீற்றர் எரிபொருளைச் சேமிக்க முடிந்தால், மொத்தம் 75,000 லீற்றர் எரிபொருளை நாளொன்றுக்கு சேமிக்க முடியும் என சுற்றிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், அரச நிறுவனங்களின் மின்சாரக் கட்டணம், எரிபொருள் கட்டணம், தண்ணீர் கட்டணம் மற்றும் தொலைபேசிக் கட்டணம் ஆகியவற்றை கடந்த மாதத்துடன் ஒப்பிட்டு சேமிக்கப்பட்ட தொகையை ஆராய்வதற்கான சிறப்பு முறையைப் பின்பற்றுமாறும் அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
1 hours ago