2025 ஜனவரி 10, வெள்ளிக்கிழமை

19,800 ’பிளாட்டினம்’ சிகரெட்டுகளுடன் ஒருவர் சிக்கினார்

Editorial   / 2025 ஜனவரி 09 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜி.கபில

சுமார் ரூ.29.7 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு சென்ற பயணி ஒருவர், வியாழக்கிழமை (08)  இரவுவிமான நிலைய  போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.  

புத்தளம், வேப்பமடுவில் வசிக்கும் 34 வயதான இவர், துபாயில் இரண்டு வருட காலப் பணியை முடித்துக்கொண்டு இலங்கைக்குத் திரும்பினார்.

துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் EK-652 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை அன்றிரவு 7.30 மணியளவில் வந்தடைந்தார்.

அவர் தனது பயணப் பையில் 19,800 வெளிநாட்டுத் தயாரிப்பு "பிளாட்டினம்" சிகரெட்டுகள் அடங்கிய 99 சிகரெட் அட்டைப்பெட்டிகளை மறைத்து வைத்திருந்தபோது, ​​ போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

 இந்தப் பயணி பொலிஸ் பிணையில், விடுவிக்கப்பட்டுள்ளார், மேலும் அவரும் அவர் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த சிகரெட்களும்   நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் எதிர்வரும் 15ஆம் திகதியன்று முன்னிலைப்படுத்தவுள்ளன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X