2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

16 இராஜதந்திர ஊழியர்களை மீள அழைக்க தீர்மானம்

J.A. George   / 2024 நவம்பர் 01 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடும்ப மற்றும் அரசியல் உறவுகளின் அடிப்படையில் கடந்த நிர்வாகத்தின் போது நியமிக்கப்பட்ட 16 இராஜதந்திர ஊழியர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீள அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொ்டர்பில் அவர்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் இலங்கை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், அரசியல் தொடர்புகளின் அடிப்படையில் இராஜதந்திர பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள மேலும் பல நபர்களை மீள அழைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .