2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

150,000 ஐ கடந்த சுற்றுலாப் பயணிகள் வருகை

Freelancer   / 2024 டிசெம்பர் 26 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த மாதத்தின் ஆரம்பம் முதல் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 150,000 ஐ கடந்துள்ளது.
 
அந்த காலப்பகுதியினுள் இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
 
இதன்படி, இந்தியாவிலிருந்து மாத்திரம் 35,131 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
 
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், 19 லட்சத்து 66 ஆயிரத்து 256 பேர் நாட்டிற்கு வருகைதந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .