2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

12 வயதுக்கு கீழ் தடுப்பூசி எப்போது?

Freelancer   / 2022 பெப்ரவரி 12 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி தொடர்பில் பந்துரைக்கும் கட்டத்தில் உள்ளது என்றும் இன்னும் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என்றும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தனவினால் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பாக இன்னும் சுற்றறிக்கை வெளியிடப்படவில்லை எனவும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.

12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இரண்டாவது டோஸை வழங்குவதற்கு சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்காக அமைச்சு காத்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, இன்று தெரிவித்திருந்தார். 

மேலும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவது தொடர்பில் சுகாதார அதிகாரிகளிடமிருந்து பரிந்துரைகளை அமைச்சு கோருவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .