2024 டிசெம்பர் 19, வியாழக்கிழமை

103 பேருடன் முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கிய படகு

Editorial   / 2024 டிசெம்பர் 19 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில்  வெளிநாட்டு பிரஜைகள் 103 பேருடன்    படகொன்று   வியாழக்கிழமை (19) கரையொதுங்கியுள்ளது.

மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் படகொன்று திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளது. குறித்த படகில் 25 க்கும் மேற்பட்ட சிறுவர்களும்  உள்ளடங்கியிருக்கின்றனர்.

அவர்களை  மீட்டு கரைக்கு  கொண்டுவரும் நடவடிக்கையில்  முல்லைத்தீவு மீனவர்கள்,  கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த படகில் இருப்பவர்களுக்கு  உணவுகள், உலருணவுகளை  முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர்  வழங்கினர். படகில் இருந்தவர்களில் சிலர் மயக்கமடைந்த நிலையிலும், சிலர் சுகயீனமுற்ற நிலையிலும் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .