2025 ஜனவரி 09, வியாழக்கிழமை

02 கிலோ கொக்கைனுடன் வெளிநாட்டவர் கைது

Editorial   / 2025 ஜனவரி 08 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜி கபில

ஒன்பது கோடியே 70 இலட்சம் ரூபாய் (97 மில்லியன் ரூபாய“) பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அறிவிக்கப்படாத "கிரீன் சேனல்" ஊடாக வெளியேற முயன்ற   பொஸ்னியா நாட்டைச் சேர்ந்த 66 வயதான நபரை விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர்     அவரை புதன்கிழமை (08) அதிகாலை  கைது செய்தனர்.

அவர் தனது சூட்கேஸில் 02 கிலோ 759 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளை மிக நுணுக்கமாக மறைத்து வைத்திருந்தார், கால்களை சுத்தம் செய்யும் பிரஸ்கள் 114 மறைத்து எடுத்து வந்துள்ளார்.

 அவர் கொலம்பியாவில் இருந்து இந்த போதைப்பொருளுடன் பயணிக்கத் தொடங்கி கத்தார் தோஹாவுக்கு வந்தார். அதன் பின்னர், புதன்கிழமை (08)  அன்று அதிகாலை 02.40 மணியளவில் கட்டார் எயார்வேஸ் விமானமான KR-662 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பொஸ்னிய பிரஜையுடன் அவர் கொண்டு வந்த கொக்கெய்ன் போதைப்பொருள்  மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X