Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சோழர் வம்சம், போர்த்துகீச, ஒல்லாந்த, பிரித்தானியர் காலனித்துவ காலத்திலிருந்து சிறந்த வரலாற்றைக் கொண்ட ஒரு அற்புதமான தீவு இந்த நெடுந்தீவாகும்.
இந்த இடம் ஏராளமான தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரியமாகும். டெல்ஃப்ட் தீவு என்று பிரபலமாக அறியப்படும் நெடுந்தீவானது, நீர், காற்று மூலம் அணுகக்கூடியது, மேலும் சுற்றுலாப் பயணிகள், கிராமவாசிகளுக்கு படகு மூலம் பயணம் செய்வது எளிதானது.
கவர்ச்சிகரமான பயணம் யாழ்ப்பாண தீபகற்பத்துக்கு பாலமாக அமைந்துள்ள புங்குடுதிவு தீவில் உள்ள கே.கே.டி ஜெட்டியின் குரிகாடு டுவானில் இருந்து தொடங்குகிறது. டெல்ஃப்டுக்குச் செல்லப் பயன்படுத்தப்படும் படகு சேவை பொதுவாக பண்டைய நாகதீபா கோயிலுக்குச் செல்லும் யாத்திரிகர்களால் பயன்படுத்தப்படுகிறது.
யாழ்ப்பாண தீபகற்பம், டெல்ஃப்ட் தீவுக்கு அருகாமையில் அமைந்துள்ள பல தீவுகளைக் காணலாம். அத்துடன் ஒரு டைவிங் இடமாக உருவாக்க ஒரு சிறந்த இடமாகவும் இது விளங்குகிறது.
டெல்ஃப்ட் தீவுக்குச் செல்வதற்கு முன் மதிய உணவைக் கட்டிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் உணவருந்த அங்கு இடங்கள் இல்லை என்பதாகும். சிற்றுண்டி அல்லது குளிர்பானங்களை வாங்க ஒரு சில சில்லறை கடைகள் மட்டுமே உள்ளன.
தீவு முழுவதும் பவளம், சுண்ணாம்புக் கல்லை அடிப்படையாகக் கொண்டது. தீவு வளர்ச்சியடையாதது, ஆனால் அதன் மக்கள் தொகை சுமார் 4,500 பேர் வரையுள்ளனர்.
தொடர்ந்து செல்லும்போது அது வெறும் நிலம் மட்டுமேயாகும். இது தீவின் குடிமக்களால் பயன்படுத்தடுவதில்லை. உள்நோக்கி செல்ல, முதலில் பழைய போர்த்துகீச கோட்டை டெல்ஃப்ட்டுக்கு காணப்படும்.
காலி கோட்டை அல்லது யாழ்ப்பாணக் கோட்டையுடன் ஒப்பிடும்போது இந்த கோட்டை அளவு சிறியது, பவளம், சுண்ணாம்புக் கற்களால் ஆனது. பழைய கப்பல்களுக்கு விரிகுடா வழங்கிய சாதகமான மூரிங் வசதிகள், எளிதில் தரையிறங்கும் வசதிகள் காரணமாக இந்த கோட்டை இங்கு அமைந்திருக்கலாம்.
பாதுகாக்கப்பட்ட தூண்கள், சுவர்கள் கோட்டை இரண்டு மாடி கட்டடம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. தரை தளத்தில் ஜன்னல்கள் இல்லை. மேலும் இது துப்பாக்கியை சேமிக்கவும் கைதிகளை வைத்திருக்கவும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இரண்டாவது மாடி ஒளி நிறைந்நததாக பெரிய அறைகளுடன் காற்றோட்டத்துக்கான ஜன்னல்களால் கட்டப்பட்டும் காணப்படுகின்றது.
இலங்கையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடங்கள் பல காணப்பட்ட போதும், யாழ்ப்பாணத்தில் அமையப்பெற்றுள்ள இந்த நெடுந்தீவும் அந்தவகையில் பிரசித்தி பெற்றதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
27 minute ago
36 minute ago
52 minute ago