Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை
ஆர்.மகேஸ்வரி / 2017 டிசெம்பர் 26 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுற்றுலாப் பயணிகளின் பாதுகப்பை உறுதிப்படுத்தல் தொடர்பாக இலங்கைக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளதாக சட்டம்,ஒழுங்குகள் மற்றம் அதிவேக அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
2017ஆண்டின் வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கு அமைய சுற்றுலா பொலிஸாருக்கு மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு நேற்று (26) சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
“ சுற்றுலாவுக்கு என நாடுகளைத் தெரிவு செய்யும் போது குறித்த நாட்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு இருக்கும் பாதுகாப்பு தொடர்பில் விசேட அவதானத்தை செலுத்த வேண்டும். அதற்கமைய தான் எந்த நாட்டுக்கு செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கலாம்.சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கும் பாதுகாப்பு தொடர்பில் உயர்ந்த மதிப்பீடு இலங்கைக்கு கிடைத்துள்ளது. அந்த பாதுகாப்பை நாம் மேலும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும்.விசேடமாக இலங்கைக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், நாம் மேலும் இதுதொடர்பில் அக்கறையைக் காட்டுவதுக்கு தான் சுற்றுலா பொலிஸ் பிரிவை முன்னேற்ற ஆரம்பித்தோம்” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago