Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஜனவரி 25 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை நீர்வீழ்ச்சி, ஆறுகள், காடுகள் என பல்வேறு இயற்கை வளங்கள் நிரம்பிய ஓர் நாடாகும். இதனால் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கையை நோக்கி படையெடுத்து வருகின்றமை அனைவரும் அறிந்த ஒன்றேயாகும்.
இந்தவகையில் இலங்கையிலுள்ள காலி மாவட்டம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த ஒரு மாவட்டமாக திகழ்கின்றது.
இதற்கு முக்கிய காரணம் ஏனைய பகுதிகளைப்போல ஒவ்வொரு சுற்றுலா தளத்திற்கும் வேறு வேறு பயணத்தை மேற்கொண்டு நெடுந்தூரம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பாலான புராதன கட்டிடங்கள் மற்றும் கடற்கரையும் பழைய காலிக்கோட்டையுடன் இணைந்திருப்பதால், இலகுவாக பார்வையிட கூடியதாக இருக்கின்றது
இப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப்பிரயாணிகள் காலிக் கோட்டை, காலி தேசிய அருங்காட்சியகம் , தேசிய கடல்சார் அருங்காட்சியகம் , ஆலயங்கள் என்பவற்றை பார்வையிட முடியும்.
சுற்றுலாப்பிரயாணிகள் ஓய்வு எடுப்பதற்கு ஏற்ற சகல வசதிகளுடன் கூடிய ஹோட்டல்களும் இப்பகுதிகளில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
28 minute ago
40 minute ago