2025 ஜனவரி 29, புதன்கிழமை

’இராவணா எல்ல’

Editorial   / 2018 ஜூலை 11 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராவணன் நீர்வீழ்ச்சியானது இலங்கையின் ஊவா மாகாணத்தில், கிரிந்தி ஓயாவுக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும். இது எல்ல – வெல்லவாய பெருந்தெருவிற்கு அருகே அமைந்துள்ளது. அத்துடன் வீதியில் நின்றடியே இதனை பார்வையிட முடியும்.  

இதன் நீர் ஊற்று வெவதன்னை மேட்டு நிலக்காடாகும். இந்நீர்வீழ்ச்சியானது, மூன்று படிநிலைகளில் பாய்கிறது. முக்கிய பாய்ச்சல் 9 மீற்றர் மட்டுமேயாகும்.  மேலும் நீர்வீழ்ச்சி சுண்ணாம்புக்கல் பாறையில் அமைந்துள்ளது. எனவே பாறை அரிப்பு துரிதமாக ஏற்படும் நிலை காணப்படுகின்றது.

இராவணன் நீர் வீழ்ச்சியானது, இந்துக்களின் இதிகாச கதையான, இராமாயணத்தோடு தொடர்புடையதாக நம்பப்படுகிறது. நீர்வீழ்ச்சிக்கு பின்னால் அமைந்துள்ள குகையில் சீதையை இராவணன் மறைத்து வைத்திருத்தார் என்பது தொன்றுதொட்டு இருந்து வரும்  நம்பிக்கையாகும். அத்துடன் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்த இடங்களில் இராவணன் எல்லயும் ஒன்றாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .