2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

Wijaya Holiday Resort - Kiriella

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உழைத்து களைத்த உள்ளங்களுக்கு ஓய்வு என்பது இன்றியமையாதது. அந்த ஓய்வு எங்கு கிடைக்கும் என ஏங்குபவர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் அநேகமாக அமைதியான, அழகான இடங்களையே நாடுவர்.

அப்படி அமைதியான இடத்தில் களைப்பாற நீங்கள் விரும்பினால், கிரியெல்ல விஜயா ஹொலிடே ரெஸோர்ட்டுக்கு செல்லுங்கள். அழகான, அமைதியான இடத்தில் இந்த ஹோட்டல் அமைந்திருப்பது மிகவும் சிறப்பானது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் மகிழ்வுடன் இருக்கக்கூடிய ஓர் இடம்தான் இது. இங்கு இயற்கையின் கைவண்ணம் விரிந்து காணப்படுகிறது. கொழும்பிலிருந்து சுமார் 60 கிலோமீற்றர் தொலைவில் இந்த ஹோட்டல் அமைந்திருக்கிறது. பாணந்துறையிலிருந்து இரத்தினபுரிக்கு செல்லும் வழியில் கிரியெல்ல விஜயா ரெஸோர்ட் அமைந்திருக்கிறது.

சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் இந்த இயற்கை அழகு கொஞ்சும் இந்த இடம் அமைந்திருக்கிறது. பார்ப்பவர்கள் கண்களுக்கு விருந்தாக அமையும் இவ்விடத்திற்கு செல்பவர்களின் மனம் நிச்சயம் குளிர்மையடையும்.

இயற்கையான அருவி பாய்ந்தோடும் அழகிய இடத்தினை குளிப்பதற்கு ஏற்றால்போல் வடிவமைத்திருக்கிறார்கள். அவரவர் விரும்பும் ஆழங்களில் குளிக்கக்கூடிய வசதியும் இங்கு இருக்கிறது. சிறுபிள்ளைகள் முதல் பெரியவர்கள்வரை தாராளமாக பயமின்றி இந்த இயற்கை அருவியில் குளித்து மகிழலாம். அத்தோடு செயற்கையான நீச்சல்தடாகமும் அங்கிருக்கிறது.

இவைதவிர, சுமார் 2 கிலோமீற்றர் காட்டு பிரதேசத்தில் அழகிய மரங்களையும் உயிரினங்களையும் ரசித்துக்கொண்டே மனங்குளிர நடைபோட வசதியாக ஏற்பாடுகளையும் விஜய ஹொலிடே ரெஸோர்ட் நிர்வாகத்தினர் செய்துகொடுக்கிறார்கள். காட்டு மரங்கள், உயிரினங்கள் பற்றிய மேலதிக விபரங்களை பெறக்கூடிய வசதியும் இங்கு இருக்கிறது.

அத்தோடு கிரிக்கெட், கால்பந்தாட்டம், பட்மின்டன் போன்ற விளையாட்டுகளிலும் ஈடுபடக்கூடிய வசதிகள் இங்கிருக்கின்றமை சிறப்பம்சமாகும். திருமண வைபவம் மற்றும் உற்சவங்களை நடத்தக்கூடிய மண்டப வசதியும் இங்கிருக்கிறது.

பகல் பொழுதினை இங்கு செலவிடுவதற்கு ஒருவருக்கு 1500 ரூபாய் அறவிடுகிறார்கள். இதில் காலை தேநீர், மதிய உணவு, மாலை தேநீர் என அனைத்து உள்ளடங்குவதோடு இயற்கை அழகினை அனுபவிப்பதற்கும் ஏற்பாடுகளை செய்துகொடுக்கிறார்கள். 12 வயதுக்கு குறைந்தவர்களுக்கு அரவாசி கட்டணம் அறவிடப்படுகிறது. 25 பேருக்கு மேல், இவ்விடத்தில் பகல்பொழுதினை செலவிட விரும்பினால் ஓர் அறையினை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். இல்லையேல் மேலதிகமாக 2500 ரூபாய் செலுத்தி அறையினை பெற்றுக்கொள்ள முடியும்.

அதுமட்டுமல்லாமல் இந்த ஹோட்டலில் எங்குமில்லாதவிதத்தில் மாணிக்க கற்கள் அகழும் இடமும் இருக்கிறது. இதனை இங்கு செல்பவர்கள் பார்த்து அதுபற்றிய விபரங்களை அறிந்துகொள்ளக்கூடியதாகவும் இருக்கின்றமை சிறப்பானதாகும். இப்படிப்பட்ட பல இயற்கை அழகுகளையும் தன்னகத்தே கொண்டுள்ள விஜயா ரெஸோர்டின் தலைவராக பின்சிறி விஜயபால இருக்கிறார். பொது முகாமையாளராக சுமுது குணவர்தன விளங்குகிறார்.

விஜயா ஹொலிடே ரெஸோர்ட்டினைப்பற்றிய மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள விரும்பினால் www.wijayaholidayresort.com என்னும் இணைய முகவரியினை பார்வையிடலாம். இல்லையேல் 045 2265520 என்னும் தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொள்ளலாம்.

நிச்சயமாக இந்த அமைதியான, அழகான விஜயா ஹொலிடே ரெஸோர்ட்டினை ஒவ்வொருவரும் நேரில் சென்று பார்த்தால்தான் அதன் அழகிய வடிவம் புரியும். Pix: Priyantha Wickrama Arachchi     Video: Waruna Wanniarachi


You May Also Like

  Comments - 0

  • Lushan Gunatilaka Friday, 24 December 2010 11:43 PM

    லாஸ்ட் மந்த் ஐ வெண்ட் டு விஜய ஹொலிடே ரிசோர்ட். இட் இஸ் வெரி நைஸ் பிளேஸ். தேரே ஆர் சோ மனி பெசிலிடிஸ்.தே ஹேவ் வெரி குட் சேர்விசெஸ்.தேகங் யு போர் இட்
    ஐ தேங்க் விஜய ரிசோர்ட் மனேஜ்மென்ட் ரூ ஸ்டாவ் போர் கிவிங் மீ திஸ் ஒபுசுர்னிட்டி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .