Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 12, வியாழக்கிழமை
A.P.Mathan / 2011 ஜனவரி 26 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனதுக்கு மகிழ்ச்சியையும் உடலுக்கு ஓய்வையும் தரும் இடங்களை மனிதர்கள் நாடிச்செல்வது வழமையானதே. ஓய்வைத்தேடி அலைகின்ற உழைக்கும் உள்ளங்களுக்கு மகிழ்வான ஓய்வு ஏற்பாட்டினை செய்து கொடுத்துவருகிறார்கள் 'சனஸ்டா' ஹோட்டல் உரிமையாளர்கள்.
பதுளை – பசறை வீதியில், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் இந்த 'சனஸ்டா' ஹோட்டல் அமைந்திருக்கிறது. அழகிய மலை சூழ்ந்த சூழலில் குளிர்மையான, மனதுக்கு இதமான இந்த ஹோட்டல் பார்ப்பவர்கள் மனதை கொள்ளைகொள்ளும் ரம்மிய தோற்றமுடையது.
ஆழகிய வரவேற்பறை, அதனைத் தொடர்ந்து நீச்சல் தடாகம், அதனை ஒட்டியதாக திருமண மண்டபம் அமைந்திருக்கிறது. இந்த திருமண மண்டபத்திலே சுமார் 350 பேர் உட்காரக்கூடிய வசதியிருக்கின்றமை சிறப்பானதாகும். மேல் தட்டிலே மற்றுமொரு திறந்த மண்டபம் அமைந்திருக்கிறது. இந்த மண்டபத்தில் இருந்து இயற்கையை ரசிக்க முடியும். அழகிய மலைகளின் குளிர்மையை மனங்குளிர ரசிக்க இந்த மண்டபம் சிறந்தது. இந்த மண்டபத்தினை ஒட்டியதாக மாநாட்டு மண்டபம் அமைந்திருக்கிறது. இதில் சுமார் 25 பேர் அமர்ந்து கூட்டங்களை நடத்த முடியும்.
அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய இந்த ஹோட்டலின் அறைகளும் அழகானவை. அறைகளின் ஜன்னலூடாக பதுளை மாநகரின் இயற்கையின் கொடைகளை ரசிக்க முடியும். மனதுக்கு ஓய்வுதேடி செல்பவர்களுக்கு இந்த அறைகளை மேலும் அமைதியை தருகின்றன. இங்கு தங்குவதற்கும் மிகக் குறைந்த கட்டணங்களே அறவிடப்படுகின்றன. தொடர்ந்து தங்கியிருப்பவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கான உடற்பயிற்சி கூடமும் இந்த ஹோட்டலில் அமைந்திருப்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
திருமண வைபவங்களை நடத்த விரும்புபவர்களின் அனைத்து தேவைகளையும் 'சனஸ்டா ஹோட்டல்' நிர்வாகத்தினர் செய்து கொடுக்கின்றனர். மணவறை, சாப்பாடு, திருமண ஏற்பாடுகள் என அனைத்தையும் இந்த ஹோட்டலிலேயே நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். விசேடமாக குறைந்த செலவில் திருமணங்களை நடத்த விரும்புவர்களுக்கு 'சனஸ்டா' சிறந்ததொரு இடமாகும். அவரவர்களின் வசதிக்கேற்ப உங்களின் தேவைக்கேற்ப திருமண ஏற்பாடுகளை சனஸ்டா ஹோட்டல் நிர்வாகத்தினர் ஏற்படுத்தித் தருகின்றனர்.
அனைத்துவிதமான வைபவங்களையும் இங்கு நடத்தக்கூடிய வசதியிருக்கின்றது. ஆகையினால் பதுளையிலே தயக்கமின்றி நாடக்கூடிய தரமான ஹோட்டல் 'சனஸ்டா' என்றால் அது மிகையாகாது.
இந்த ஹோட்டல் பற்றிய மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள விரும்பினால் 055-3553535 அல்லது 055-4901716 என்ற இலக்கத்தினூடாக தொடர்புகொள்ளலாம். Pix: Waruna Wanniarachchi
kikp Friday, 06 May 2011 05:51 AM
ehtu nalla ஹோட்டல்
Reply : 0 0
imran Thursday, 04 August 2011 06:35 PM
மிகவும் வடிவாக உள்ளது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago