2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

பாசிக்குடாவில்...

Kanagaraj   / 2014 ஏப்ரல் 19 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம், தேவ அச்சுதன்


கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யவும் உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனையை ஊக்குவிக்கவும் தமிழ் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டும் பாசிக்குடா பாரம்பரிய விளையாட்டு விழா நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (18) பாசிக்குடா கடற்கரையில் நடைபெற்றன.

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி நிறுவனம் ஏற்பாடு செய்த பாசிக்குடா பாரம்பரிய விளையாட்டு விழாவில் மரதன் ஓட்டப் போட்டி, நீச்சல், படகோட்டம், கரப்பந்து, உதைபந்து, தலையனைச் சமர், கபடி, முட்டி உடைத்தல் போன்ற விளையாட்டுக்கள்; இடம் பெற்றன.
மதங்களின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் பௌத்த, இந்து, முஸ்லிம் சமயங்களின் கலாச்சாரங்களை பிரதி பளிக்கும் வகையில் கலாச்சார ஊர்வலமும் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி பி.எம்.எஸ்.சாள்ஸ், கோறளைப்பற்று பிரதேச செயலக செயலாளர் திருமதி ரீ.தினேஸ், கோறளைளப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், கிழக்கு மாகாண சுற்றுலாதுறை அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் கே.கிருஷாந்தன், கிழக்கு மாகாண சுற்றுலாதுறை அபிவிருத்தி நிறுவனத்தின் குழு அதிகாரி சிஹாப் செய்தீன், மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மரதன் ஓட்டப் போட்டி வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தியில் இருந்து பாசிக்குடா கடற்கரை வரை ஏழு கிலோ மீற்றர் வரை ஓடி முதலாம் இடத்தினை கண்ணஙகுடாவைச் சேர்ந்த கே.கோகுலநாதனும் இரண்டாம் இடத்தினை மாவடிவேம்பைச் சேர்ந்த பி.தசரதனும் மூன்றாம் இடத்தினை கரடியனாரைச் சேர்ந்த வீ.விஜிகரனும் பெற்றுக் கொண்டனர்.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X