2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

ரம்மியமான ஹெரிடன்ஸ் அகுங்கல

Super User   / 2013 ஏப்ரல் 01 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



-றிப்தி அலி


மலையும் மலை சார்ந்த இடம், கடலும் கடல் சார்ந்த இடம் மற்றும் வயலும் வயல் சார்ந்த இடம் ஆகிய வார்த்தைகளை நாம் பாடசாலைகளில் கல்வி கற்கும் காலங்களில் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் கடலும் ஹோட்டலும் சார்ந்த இடமொன்றை கேள்விப்பட்டதே இல்லை.

அவ்வாறான ஓரிடத்திற்கே தற்போது நான் உங்களை அழைத்துச் செல்கின்றேன். அதாவது கடலும் ஹோட்டேலும் இணைந்தாக காணப்படுகின்ற ஓர் இடம் தான் ஹெரிடன்ஸ் அகுங்கல. கடலை அண்மித்த இடங்களில் ஹோட்டல்கள் காணப்படலாம்.


ஆனால் ஹோட்டலும் கடலும் இணைந்ததாக எங்கும் காண முடியாது. எனினும் கடலும் ஹோட்டலும் இணைந்த ஓர் இடத்திலேயே இந்த அகுங்கல ஹெரிடன்ஸ் உள்ளது. ஐந்து நட்சத்திர அந்தஸ்தினை பெற்ற இந்த ஹோட்டல் தென் மாகாணத்தின் காலி மாவட்டத்தில் உள்ளது. அதாவது அம்பலாங்கொடை நகரிற்கும் அளுத்கமை நகரிற்கும் இடையில் இந்த ஹோட்டல் உள்ளது.

கொழும்பிலிருந்து 76 கிலோ மீற்றர் தூரத்தில் காலி வீதியிலேயே ஹெரிடன்ஸ் அகுங்கல உள்ளது. 1981ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஹோட்டல் ரைட்டன் என அழைப்பட்டது.சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல் இலங்கையின் பிரபல தனியார் நிறுவனமான எயிட்கன்ட் ஸ்பென்சினால் நிருவகிக்கப்படுகின்றது.



இந்த ஹோட்டலின் வரவேற்பு பகுதியிலேயே நீர் தடாகமுள்ளது. இந்த நீர் தடாகத்திற்கு அண்மித்த பகுதியிலேயே கடற்கரையும் உள்ளது. இரண்டு நீல நிற நீர்களும் ஒன்றினைவதனாலேயே கடற்கரையும் ஹோட்டலும் நெருங்கியதாக இந்த ஹோட்டல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஹோட்டிலிற்கான வடிவமைப்பு பிரபல கட்டிட கலைஞர் ஜெப்ரி பாபாவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவரின் வடிவமைப்பிற்கு அமைய எந்தவித மாற்றங்களுமின்றியே இந்த ஹோட்டல் மிகுந்த இயற்கை அழகுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹோட்டேல் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனினும் இந்த அனர்த்தத்தினால் ஹோட்டலுக்கு பாரிய சேதம் ஏற்பட்டதே தவிர எந்தவித உயிர் ஆபத்தும் ஏற்படவில்லை.சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்த ஹோட்டல் 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் புனரமைக்கப்பட்டு ஹெரிடன்ஸ் அகுங்கல என பெயர் மாற்றப்பட்டது.

இந்த ஹோட்டலிற்கு சுவிற்ஸர்லாந்து, ஜேர்மனி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்தே அதிக சுற்றுலா பயணிகள் வருவது வழமையாகும். இங்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக இந்த ஹோட்டலுக்கு தங்களின் விடுமுறையினை கழிப்பதற்காக விஜயம் செய்வது வழமையாகும். 

இதற்கு மேலதிகமாக உள்ளூர் சுற்றுலா பயணிகளும் இந்த ஹோட்டலுக்கு விஜயம் செய்கின்றனர். இவர்களுக்கு ஏற்ற வகையில் விசேடமாக பல வகையான பக்கேஜ்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தங்களுக்கு ஏற்றவகையில் தெரிவு செய்வதற்கான சிறந்த பக்கேஜ்கள் குறைந்த கட்டணத்தில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன.

152 அறைகளை கொண்டுள்ள இந்த ஹோட்டலில் 128 டிலக்ஸ், 15 லக்ஷரி, 5 சுட் மற்றும் 4 லக் சுட் ஆகிய வகையான அறைகள் உள்ளன. இந்த சுயிட் அறைகளில் இரண்டுக்கு மாத்திரம் சேர் ஹிலிப் ரிச்சர்ட் மற்றும்; டெண்டுல்கர் என பெயர் சூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றில் லக்ஷரி அறையில் தங்குபவர்கள் நேரடியாக கடலை பார்வையிட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த அறைகளில் மின் விசிறி, ஏ.சீ, மினி பார், வைபை, வானொலி பெட்டி, சவர், பாத், எல்.சீ.டி. சடலைட் தொலைக்காட்சி, உள்நாட்டு - வெளிநாட்டு தொலைபேசி சேவை மற்றும் தேநீர் தயாரிப்பு உபகரணம் ஆகியன உள்ளன. இவற்றுக்கு மேதிகமாக லொன்டிரி சேவை, வைத்தியர் சேவை, ஜிம், கார் சேவை, குதிரை மற்றும் யானை சவாரி ஆகியனவும் உள்ளன.

அத்துடன் மூன்று உணவகங்களும் ஐந்து பார்களும் இங்கு உள்ளன. இதன் பிரதான உணவகத்திற்கு யூட் எனவும் ஏனையவற்றிற்கு மஸ்ராட், அப்ப றூம் (பைன் டைனிங்) எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாக்குஸ், பூல், வோல், அப்போலோ மற்றும் ஒபியஸ் ஆகிய பெயர்களில் பார்களும் உள்ளன.


இதற்கு மேலதிகமாக நீச்சல் தடாகம், பிலியர்ட்ஸ், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், வலைப்பந்தாட்டம், ஸ்பா மற்றும் 24 மணி நேர இணையத்தள சேவையுடன் கூடிய நூலகம் ஆகிய வசதிகளும் காணப்படுகின்றன. திவ்யான ஸ்பா சேவை இலங்கை சில இடங்களில் மாத்திரமே மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றில் இந்த ஹெரிடன்ஸ் அகுங்கலவும் ஒன்றாகும்.

இங்கு நன்கு பயிற்றுவிக்கப்பட்ட தாய்லாந்து மற்றும் பாலி ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களினாலேயே இந்த வகையான ஸ்பா சேவை மேற்கொள்ளப்படுகின்றது. இந்த ஹோட்டேல் இரண்டு கூட்ட அறைகளையும் கொண்டுள்ளது. இவற்றிற்கு காங்கிரஸ் மற்றும் மினி காங்கிரஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாரம்பரிய கலை அம்சத்தினைக் கொண்ட இந்த ஹோட்டல் உணவுக்கு பிரபல்பயம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஹோட்டலிற்கு விஜயம் செய்பவர்கள் வெப்ப வளி பலூன் சவாரி, மாது கங்க ஆற்று சவாரி ஆகியவற்றை அனுபவிப்பதுடன் அம்பலாங்கொடை முகமூடி நூதனசாலை, காலி கோட்டை மற்றும் ஹிக்கடுவை முருகைக்கற் பாறை, மெட்டியாகொடை மூன் ஸ்டோன் மைன் மற்றும் திமிங்கிலங்களை பார்வையிடும் வாய்ப்பு ஆகியனவும் உள்ளது.

இவற்றிற்கு மேலதிகமாக வெளிநாட்டவரின் திருமணங்களை நடத்துவதிலும் இந்த ஹோட்டல் பிரபல்யம் பெற்றுள்ளது. இதுவரை பல வெளிநாட்டு பிரஜைகளின் திருமணங்கள் இந்த ஹோட்டலில் இடம்பெற்றது. அது மாத்திரமல்லாமல் உள்நாட்டு பிரஜைகளின் திருமணங்களும் இங்கு இடம்பெறுவது வழமையாகும்.

சுற்றுலா பயணிகளின் நன்மைகருதி நகைக்கடை, கைவினைத்திறனினால் உருவாக்கப்பட்ட பொருட்களின் கடை ஆகியனவும் உள்ளன. மேற்குறிப்பிட்ட வசதிகளை கொண்ட இந்த ஹோட்டலின் பொது முகாமையாளராக கடமையாற்றுகின்ற ரெப்ஹான் என். ரசீனினின் தலைமையிலான ஊழியர்கள் - விருத்தினர்களை மிக்க சிறந்த முறையில் வரவேற்கின்றனர்.

புதுவருட விடுமுறை ஆரம்பிக்கும் இந்த தருணத்தில் இப்பொழுதே இந்த ஹோட்டலை நீங்கள் தெரிவுசெய்து கொண்டால் புதுவருட விடுமுறையினை மகிழ்ச்சியாக கழிக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. 0094915555000 என்ற தொலைபேசி இலக்கம் மற்றும் gm.ahu@heritancehotels .com என்ற மின்னஞ்சல் ஆகியவற்றின் ஊடாக தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.










You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .