Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 04, புதன்கிழமை
Super User / 2011 ஜூலை 01 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
குமன விலங்குகள் சரணாலயத்தினைப் பார்வையிடுவதற்கு வருகைதரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் பாணம பிரதேசத்திரேலேயே குமன தேசிய வனப்பகுதி அமைந்துள்ளது.
நாட்டில் நிலவிய பயங்கரவாத சூழ்நிலை காரணமாக 1985ஆம் ஆண்டிலிருந்து கடந்த வருடம் வரை இங்கு சென்று வர முடியாததொரு சூழ்நிலை நிலவியது. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாகவும் குமன தேசிய சரணாலயப் பகுதி கடுமையான பாதிப்புக்குள்ளானது.
எவ்வாறாயினும், கடந்த வருடம் இந்த சரணாலயம் பொதுமக்களின் பார்வைக்காக மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.
இதேவேளை, இந்த சரணாலயத்தின் உள்ளே சுற்றுலா பயணிகள் சௌகரியமாக பயணிப்பதற்கான வீதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, நல்ல சூழ்நிலைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் இங்கு வருகை தரும் சுற்றுலாப் பணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குமன வன பகுதியானது யால விலங்குகள் சரணாலயத்தின் ஒரு எல்லையாக காணப்படுகிறது. இங்கு ஓடிக்கொண்டிருக்கும் கும்புகங் ஓயா எனும் ஆற்றின் ஒரு கரையானது குமண வன பகுதி அமைந்துள்ள அம்பாறை மாவட்டத்தின் நிருவாக பகுதிக்குள்ளும், மறுகரை அம்பாந்தோட்டை மாவட்ட நிருவாகத்துக்குள்ளும் அடங்குகின்றமை சிறப்பம்சமாகும்.
குமன காட்டு பகுதிக்குள் நாம் பயணித்த போது, அங்கு இறந்து கிடந்த யானையொன்றின் சடலத்தையும் காண முடிந்தது.
slmunas Saturday, 02 July 2011 02:11 AM
பத்திரிகையாளருக்கு நன்றி படப்பிடிப்பு நன்றாக உள்ளது .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago